புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள அணவயல் என்ற கிராமத்தில் மதுக்கடைகள் இல்லாத இடத்தில் புதுப்பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு வீட்டிலிருந்து விற்பதாக மது விலக்கு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ஆலங்குடி மதுவிலக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அணவயல் கிராமத்தில் சண்முகம்(68) என்பவர், துலுக்கவிடுதி சாலையோரம் உள்ள புளியமரத்தடியில் ஓரமாக உட்கார்ந்து மது பாட்டில்கள் விற்பனை செய்துகொண்டு இருந்தார்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்!
புதுக்கோட்டை: அணவயல் என்ற கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 17 மது பாட்டில்களை ஆலங்குடி மதுவிலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுப் பாட்டில்கள் பறிமுதல்
அவரிடம் விசாரணை செய்ததில் அப்பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்கள்தான் விற்கச் சொன்னதாகவும், தான் கூலிக்கு விற்றுக் கொடுப்பதாகவும் தகவல் சொல்லியிருக்கிறார். காவல்துறை அவரைக் கைது செய்ததோடு அவரிடமிருந்த 17 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், சண்முகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.