பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே கொட்டரை கிராமத்தில் இளையராஜா - அகிலா என்பவருக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு இளையராஜாவின் நண்பர்கள் வைத்த பேனர் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'ஜீ உங்க ஆசிரமத்துல கூட்டி பெருக்குற வேலையாவது குடுங்க ஜீ...' - திருமணத்தில் நித்யானந்தாவிற்கு பேனர் வைத்த சிஷ்யர்கள் - நித்யானந்தா உடல்நலம்
பெரம்பலூர் அருகே கொட்டரை கிராமத்தில், 'நித்யானந்தா சுவாமிஜீ உங்க ஆசிரமத்துல கூட்டி பெருக்குற வேலையாவது குடுங்க ஜீ...' என திருமணத்திற்கு வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜீ உங்க ஆசிரமத்துல கூட்டி பெருக்குற வேலையாவது குடுங்க ஜீ... நித்யானந்தாவிர்க்கு பேனர் வைத்த சிஷ்யர்கள்
அந்தப் பேனரில், 'ஆஹா கல்யாணம் - கைலாயத்திலா' என்றும், நித்யானந்தாவின் படம் வைத்து 'ஜீ உங்க ஆசிரமத்துல கூட்டி பெருக்குற வேலையாவது குடுங்க ஜீ...., குருநாதா - உங்கள் வார்த்தைக்காக காத்திருக்கும் உங்கள் சிஷ்யர்கள்' என காமெடி கவுன்ட்கள் உள்ளன. தற்போது இந்தப் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க:மதுப்பிரியர்கள் கவனத்திற்கு!!… அமலுக்கு வந்தது மது பாட்டில்கள் திரும்ப பெறும் நடைமுறை!!