பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலமுருகன் என்பவரின் தங்கையை பெண் வீட்டார் சம்மதமின்றி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு பாலமுருகன், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.
குடும்ப பிரச்னையை தடுக்க வந்த இளைஞர் கொலை - ஒருவர் கைது! - தமிழ் குற்ற செய்திகள்
பெரம்பலூர்: குன்னம் அருகே தங்கையை காதலித்து திருமணம் செய்த இளைஞருடன் ஏற்பட்ட மோதலின்போது, தடுக்க வந்த மற்றொரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற இளைஞர் இவர்களது சண்டையை தடுத்து இருவரையும் விலக்க முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அந்நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் காவல் துறையினர் செல்வக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து செல்வக்குமாரை கொலை செய்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்தனர்.