பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் - அய்யாக்கண்ணு - அய்யாக்கண்ணு
பெரம்பலூர்: 68 உள்பிரிவுகள் அடங்கிய சீர்மரபினர் சமூகத்திற்கு ஒன்பது விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை எனில் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் என தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
ayyakkannu
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "68 சாதி பிரிவினர் உடைய எங்கள் சமூகத்திற்கு உரிய அங்கீகாரமும் சலுகைகளும் கிடைக்கவில்லை 80 விழுக்காடு பேர் சுமை தூக்கும் தொழில், கல் உடைக்கும் தொழில் என பல்வேறு கூலித்தொழில் செய்துவருகின்றனர்.
68 உள்பிரிவுகளை உள்ளடக்கிய சீர் மரபினர் சமூகத்திற்கு ஒன்பது விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை எனில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலையும் சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிப்போம்" என்றார்.