இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனிடையே கத்தரி வெயில் என்று சொல்லப்படுகின்ற அக்னி வெயில் நேற்று தொடங்கியுள்ளது. அதனால், பொதுமக்கள் குளிர்ச்சியை தரும் இளநீர், தர்பூசணி, நொங்கு உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
வாட்டி வதைக்கும் வெயில்; தர்பூசணி விற்பனை ஜோர்!
பெரம்பலூர்: அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கியுள்ளதால் தர்பூசணி பழத்தின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் இருந்து வருகிறது.
வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்தோடு இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். கத்திரியை சமாளிக்க நீர்சத்து மிகுந்த பழமான தர்பூசணி பழத்தை மக்கள் அதிகமாக உண்டு வருகின்றனர். மக்களின் தேவை அதிகமாக இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தில் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. தர்பூசணி ஒரு கிலோ ரூபாய் 15 முதல் 30 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரி கூறுகையில், "இந்த மாதத்தில் முலாம் பழம், இளநீர் மற்றும் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ப முலாம் பழம், இளநீர், தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதனால் இவைகளின் விற்பனை அதிகமாக உள்ளது" என்றார்.