தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பற்றிய முகாம் இந்த மாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.