தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம் - mettupalayam wall collapse incident

பெரம்பலூர்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vck protest on mettupalayam wall collapse incident, விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம்
vck protest

By

Published : Dec 5, 2019, 7:47 AM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

ஆர்பாட்டத்தில் விபத்திற்கு காரணமான சுவரை எழுப்பியவரை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட நாகை திருவள்ளுவன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details