பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த ரஜினி என்பவரையும், பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து வேட்டையாட முயற்சி - இருவர் கைது - வனத்துறையினர்
பெரம்பலூர்: மங்களமேடு பகுதிகள் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்து வேட்டையாட முயன்றதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Two persons arrested for using unlicensed local gun
அப்போது, SBML துப்பாக்கி உரிமம் இல்லாமல் வன விலங்குகளை வேட்டையாட அவர்கள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூர் வனசரக அலுவலர் சசிகுமார் தகவல் அறிக்கையின் படி இரண்டு பேரையும் மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மங்களமேடு காவல் துறையினர் இரண்டு பேரையும் கைது செய்தனர்.