தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு - two bike collapsed at perambalur

பெரம்பலூர்: இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து
விபத்து

By

Published : Feb 11, 2020, 1:34 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் செல்வகுமார் (30), நெய்க்குப்பையைச் சேர்ந்த செல்லமுத்து (40), எசனையைச் சேர்ந்த ராமர் (38) ஆகிய மூன்று பேரும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றிவந்தனர். இவர்கள் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் ஒரே இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணாபுரத்திலிருந்து வேப்பந்தட்டை நோக்கி பெரம்பலூர் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்திசையில் பூலாம்பாடிக்குச் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் இளங்கோவன் (37) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானது. இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும் உயிரிழந்த செல்வகுமாரின் உடலை உடற்கூறாய்வுக்கும் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்

ABOUT THE AUTHOR

...view details