பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சங்கு பேட்டை பகுதியில் வசித்து வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் பாண்டி என்கிற வல்லத்தரசு, கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சங்கு பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், விஜயராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், அம்மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.