தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பலத்த காயங்களுடன் வீட்டில் மீட்கப்பட்ட திருநங்கையின் உடல் - transgender body recovered

பெரம்பலூர்: பலத்த காயங்களுடன் திருநங்கை ஒருவரின் உடலை மீட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

transgender-body-recovered
transgender-body-recovered

By

Published : Jul 20, 2020, 2:00 AM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஒதியம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதையடுத்து அண்ணாதுரை தன்னை பெண்ணாக உணர்ந்து திருநங்கையாக மாறி அன்னக்கொடி என்றப் பெயரில் 4 ரோடு பகுதியில் வசித்துவந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் குடியிருந்த வீட்டில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் வசித்த திருநங்கைகள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:வாகனத் தணிக்கையில் ஏற்பட்ட மோதல்... உயிரை மாய்த்துக்கொண்ட திருநங்கை!

ABOUT THE AUTHOR

...view details