மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக கண்ணை கட்டிக் கொண்டு போராட்டம் நடைபெற்றது.