தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் பிரச்னை-மணமக்களுக்கு வாளியில் குடிநீர் அன்பளிப்பு! - அன்பளிப்பு

பெரம்பலூர்: திருமணத்தில் மணமக்களுக்கு வாளியில் குடிநீரை கொடுத்து வித்தியாசமான முறையில் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாளியில் குடிநீர் அன்பளிப்பு

By

Published : Jul 8, 2019, 6:43 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லப்பன். இவர் இயற்கை விவசாயியாகவும் அவ்வூரில் உள்ள புதியப் பயணம் என்ற சமூகநல அமைப்பில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இன்று இவரது திருமணத்தில் கலந்துகொண்ட இவரின் நண்பர்கள் தமிழ்நாட்டில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை வலியுறுத்தும் விதமாக வித்தியாசமான முறையில் ஒரு வாளியில் குடிநீரை அன்பளிப்பாக கொடுத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மணமக்களுக்கு வாளியில் குடிநீர் அன்பளிப்பு

இந்த நிகழ்வு அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தது.

ABOUT THE AUTHOR

...view details