தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணொலிக் காட்சி மூலம் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு - Video footage

பெரம்பலூர்: வேளாண் துறை சார்பில் மூன்று கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

காணொலி காட்சி மூலம் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

By

Published : Jun 21, 2019, 1:18 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், வேப்பந்தட்டை வட்டம் பகுதியில் வேளாண் துறை சார்பில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையம், விதை சேகரிப்பு கிடங்கை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தனர். வேளாண் துறை அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details