உலகில் பாலைவன பகுதியிலும், வளைகுடா நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பேரீச்சம் பழங்கள் தற்போது தமிழ்நாட்டிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உதரணமாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தில் வசித்து வரும் விஸ்வநாதன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
பேரீச்சம் பழம் சாகுபடியில் அசத்தும் வங்கி ஊழியர்! - perambalur
பெரம்பலூர்: அனுக்கூர் கிராமத்தில் வங்கி ஊழியர் ஒருவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் பேரீச்சை மரக்கன்றுகளை நட்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ளர்.
தற்போது பேரீச்சம் பழம் சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் இவர் தன்னுடைய நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 90 பேரீச்சை மரக்கன்றுகளை நட்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ளர். சொட்டூநீர் பாசனத்தில் நடவுச் செய்யப்பட்டுள்ள இந்த மரக்கன்றுகள் அனைத்தும் தற்போது காய்த்து குலுங்குகின்றன.
மேலும் காய்கள் கொத்து கொத்தாக காய்த்துள்ளதால், அவைகள் சேதமடையாமல் இருக்க பைகளில் காய்களை மூடி பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது தோட்டத்தில் விளைந்த பேரீச்சம் பழங்களை கிலோ ரூ.300-க்கும், செங்காய்களை ரூ.200-க்கும் விற்பனை செய்து வருகிறார்.