தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரத்த தான விழிப்புணர்வு பேரணி!

பெரம்பலுார்: ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, ரத்த தானம் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

விழிப்புணர்வு பேரணி

By

Published : Jun 19, 2019, 6:52 PM IST


உலக ரத்த தான தினம் ஜூன் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பெரம்பலூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாந்தா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக ரத்த தான விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பேரணியில் கலந்துகொண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். பெரம்பலூர்-பாலக்கரை பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக அரசு மருத்துவமனையில் முடிவுற்றது.

ரத்த தான விழிப்புணர்வு பேரணி!
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details