தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூளைச்சாவு அடைந்த ஏழை தொழிலாளி; மறுவாழ்வு பெற்ற மூன்று பேர்..! - தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி

பெரம்பலூரில் மூளைச்சாவு அடைந்த ஏழைத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் பெற்றதன் மூலம் முன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

மூளைச்சாவு அடைந்த ஏழைத் தொழிலாளி உடல் உறுப்பு தானம்
மூளைச்சாவு அடைந்த ஏழைத் தொழிலாளி உடல் உறுப்பு தானம்

By

Published : Nov 10, 2022, 12:54 PM IST

பெரம்பலூர்: சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் கடந்த நவ.5ம் தேதி பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்த 52 வயதுஏழைத் தொழிலாளி சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.

இதனிடையே மருத்துவமனை மூலம் மூளைச்சாவு அடைந்த குடும்பத்தினரை மருத்துவர்கள் சந்தித்து உடல் உறுப்புகள் தானம் குறித்து எடுத்துரைத்தன் மூலம் உடல் உறுப்புகள் தானம் வழங்க குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு மூளைச்சாவு அடைந்தவரின் இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இருதயம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த ஏழைத் தொழிலாளி உடல் உறுப்பு தானம்

தானமாக பெறப்பட்ட ஊடலுறுப்புகளில் சிறுநீரகமானது, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு ஒரு சிறுநீரகமும், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு ஒரு சிறுநீரகமும், பொருத்தப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள ஒரு நோயாளிக்கு இதயம் பொறுத்தப்பட்டு தற்போது மூவரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முறையாக மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக பெற்றதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?

ABOUT THE AUTHOR

...view details