தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் மீது கார் மோதிய கோர விபத்து - 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

பைக் மீது கார் மோதிய கோர விபத்து
பைக் மீது கார் மோதிய கோர விபத்து

By

Published : Jul 23, 2022, 4:08 PM IST

பெரம்பலூர்:சென்னையில் இருந்து காரைக்குடிக்கு சேதுராமன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தனர். பார்வதி நாதன் என்பவர் காரை ஓட்டிச் சென்றார். பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் மீது கார் மோதியது.

மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற தெய்வயானை மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற கதிர்வேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சேதுராமன் அவரது மனைவி வசந்தா ஆறு வயது மகள் மற்றும் ஓட்டுநர் பார்வதி நாதன் ஆகியோர் பலத்த படு காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் பார்வதிநாதன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களில் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details