பெரம்பலூர்:வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர், பட்டு (53). சிறுவயதிலேயே கணவரை இழந்த பட்டு, தனது மூன்று குழந்தைகளையும் கூலிவேலை பார்த்து காப்பாற்றினார். இந்த நிலையில் அவர் 2017ஆம் ஆண்டு வேப்பந்தட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக சேர்ந்தார்.
பார்ப்பது தினக்கூலி வேலை என்றாலும் தனக்கு கிடைத்த தூய்மைப் பணியை கண்ணும் கருத்துமாக பொறுப்புடன் செய்துவந்துள்ளார். வார்டு வார்டாக வண்டியை தள்ளிக்கொண்டே குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த பட்டு, தான் இறக்கும்போது தூய்மைப் பணியாளர் சீருடையை அணிந்தவாறே இறக்கவேண்டும் வேண்டும் என்று சகப் பணியாளர்களிடமும், உறவினர்களிடமும் அவ்வப்போது கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் தூய்மைப்பணியாளர் பட்டுவிற்கு நள்ளிரவில் மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தனது இறுதிகாலம் நெருங்கிவிட்டதை முன்கூட்டியே கணித்த பட்டு, தன்னுடைய தூய்மைப் பணியாளர் சீருடையை உறவினர்களிடம் கேட்டுவாங்கி அணிந்துள்ளார்.