பெரம்பலூர் அருகேயுள்ள குடிசை மாற்று குடியிருப்பு வளாகம் தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய சித்த மருத்துவ மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு காட்சி பதிவு வெளியிடப்பட்டன.
அதில், கரோனா தொற்று நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், மிளகு கலந்த குடிநீர், சத்தான உணவு மற்றும் யோகா பயிற்சி உள்ளிட்டவைகளோடு சிறப்பு சிகிச்சை தரப்படுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் காட்சி பதிவு மூலம் பேசிய மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, “தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலால் கரோனா தொற்று பரவாமல் இருக்கவும், பாதித்தவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்று கண்டறிய 28 ஆரம்ப சுகாதார நிலையம், மூன்று வட்டார அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, 12 நடமாடும் பரிசோதனை மையம் அகியவை செயல்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அரசின் அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் பொதுமக்கள் பின்பற்றி கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:மதுபானங்கள் விலை உயர்வு: மதுப்பிரியர்கள் கவலை