பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில். இக்கோயில் பல்வேறு சிறப்புக்களை உடையது. முன்னொரு காலத்தில் செல்லியம்மன் அருள் பாலித்ததாகவும் கண்ணகியே மதுர காளியம்மனாக அருள் புரிந்தாகவும் கூறப்படுகிறது. பல சிறப்புகள் கொண்ட இந்த கோயில் திங்கள் - வெள்ளி, அமாவாசை - பெளர்ணமி ஆகிய நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு அம்மன் அருள் புரிவதாகவும் மற்ற நாட்களில் சிறுவாச்சூரை ஒட்டியுள்ள பெரியசாமி மலையில் அம்மன் அருள் புரிந்துவருவதாக கூறப்படுகிறது.
சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழா-அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் - திருக்கோவில் பெருந்திருவிழா
பெரம்பலூர் : பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மதுரகாளியம்மன் திருக்கோவில் பெருந்திருவிழா
இந்நிலையில் இத்திருக்கோயிலின் பெருந்திருவிழா கடந்த மே 8ஆம் தேதி பூச்சொரிதல் விழாவோடும், மே 15ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழாவும் தொடங்கியது. இதையடுத்து, நேற்று காலை பக்தர்கள் பால் குடம் ஊர்வலமும், மாலையில் அக்னி சட்டி எடுத்து வந்தும் , அலகு குத்திக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் பக்தி முழங்க செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது.