கரோனா தொற்று அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் மலை மீது அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.
குரங்குகளுக்கு உணவளித்த திருக்கோயில் நிர்வாகம்
பெரம்பலூர்: தேசிய ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்துவரும் குரங்குகளுக்கு கோயில் நிர்வாகம் உணவளித்து வருகின்றது.
monkey
இந்தத் திருக்கோயில் மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருக்கோயிலாகும். கோயிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ளன.
ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும் வராத காரணத்தால் குரங்குகள் உணவின்றி தவித்தன. இதனையடுத்து திருக்கோயில் நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு வார கலமாக தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டுவருகிறது.