தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி நிரந்தரம் செய்ய டாஸ்மாக் விற்பனையாளர்கள் கோரிக்கை! - tamil latest news

பெரம்பலூர்: பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்கள் மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

tasmac staffs protest
tasmac staffs protest

By

Published : Dec 15, 2020, 10:57 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்கள் மாநில கூட்டம் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் பாரதி, "17 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்வதற்காக போராடி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், ஆய்வு என்ற பெயரில் அபராதம் மற்றும் தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை விடுக்கும் டாஸ்மாக் விற்பனையாளர்கள்!

19 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது, கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர் ராஜாவின் குடும்பத்திற்கு குடும்ப நல நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்றார்.

இந்த கூட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details