விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதிக்கின்ற புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்!
டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்திற்கு பெரம்பலூரில் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூரில் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:போராட்டம் செய்தவர்களை தாக்கிய காவல் துறை