தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம்! - ஒன்பது அம்ச கோரிக்கை

பெரம்பலூர்: 9 அம்ச கோரிக்கைகளை மாவட்டம் முழுவதும் உள்ள 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 287 நபர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Start-up Agricultural Cooperative Bank employees on strike!
Start-up Agricultural Cooperative Bank employees on strike!

By

Published : Jul 25, 2020, 3:14 AM IST

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில், 53 கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 287 நபர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தில்,

1.கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நேரடியாக கடன் வழங்க அனுமதிக்க வேண்டும்

2.பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

3. வருமான வரித்துறையின் டிடிஎஸ் வரியை ரத்து செய்ய வேண்டும்

4. அங்காடி பணியாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்கிட வேண்டும்

5. கூட்டுறவு நிறுவனங்களில் புதிதாக மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க அலுவலகத்தை மூடி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details