பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வெண்பாவூர், வடகரை, முருக்கன்குடி, கீழக் கணவாய், பாடாலூர், அன்னமங்கலம் உள்ளிட்டப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்டவை அதிக அளவில் வாழ்கின்றன. இதனிடையே அவ்வப்போது மான்கள், மயில்கள் உள்ளிட்டவை பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
சாலையில் ஒய்யாரமாக சுற்றித் திரிந்த மான் - வனப்பகுதி
பெரம்பலூர்: கரோனா வைரஸ் காரணமாக தளர்வுகள் இன்றி, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் துறைமங்கலம் பகுதியில் புள்ளிமான் ஒன்று சாலையில் திரிந்து வருகிறது.
spotted deer roaming the road in Perambalur
இந்நிலையில் பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான நான்கு ரோடு துறைமங்கலம் பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் சாலையில் ஒய்யாரமாக சுற்றித் திரிந்தது. கரோனா தொற்று காரணமாக, ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வாகனங்களின்றி சாலை வெறிச்சோடி காணப்படுவதால், மான் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து வருகிறது.