பெரம்பலூர்:வேப்பூர் அருகே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன். இவரது தாயார் லட்சுமி என்பவர், அதே ஊரில் உள்ள வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார்.
இவர் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து, பள்ளக்காளிங்கராயநல்லூர் மயானத்தில் அடக்கம் செய்து விட்டனர். இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கலைவாணன் தனது வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, அவரது தாய் லட்சுமி இறந்த அன்று இரவு 10 மணிக்கு மேல் அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு, அவரது உறவினர் சிலர் வந்து சென்றது பதிவாகியிருந்தது.
இதனால், தனது தாயின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சடலத்தை தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கடந்த மாதம் 28ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலைவாணன் மனு கொடுத்திருந்தார்.