பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சேத்து மாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா இன்று(செப் 16) நடைபெற்றது.
சேத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா! - Valikandapuram
பெரம்பலூர்: வாலிகண்டபுரம் சேத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக இன்று(செப் 16) நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால யாக வேள்விகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று(செப் 16) யாகசாலை பூஜையில் பல்வேறு மூலிகை பொருள்கள் செலுத்தப்பட்டு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோபுர விமானத்திற்கு வந்தடைந்தன.
பின்னர் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் வாலிகண்டபுரம் மேட்டுப்பாளையம் வல்லாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்