தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்குணம் பெரிய ஏரியில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூர்: செங்குணம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் குடிமராமத்து பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடங்கிவைத்தார்.

செங்குணம் பெரிய ஏரியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகள்
செங்குணம் பெரிய ஏரியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகள்

By

Published : May 22, 2020, 2:14 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் உள்ள ஏரி, கருவேல முட்கள் சூழ்ந்து பராமரிப்பற்று இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், செங்குன்றம் ஏரியில் இன்று குடிமராமத்துப் பணிகள் தொடங்கின.

இதற்கான பூமி பூஜை தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் சாந்தா, குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடக்கி வைத்தனர்.

செங்குணம் பெரிய ஏரியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகள்

பெரம்பலூர் மாவட்டத்தின் பரப்பளவில் பெரிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில், சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் அப்பகுதியைச் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :சொந்த ஊருக்குச் செல்லும் வெளிமாநிலத்தவர்கள்

ABOUT THE AUTHOR

...view details