பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பாக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் தொடர்பான பெரம்பலூர் மாவட்ட பாசனதாரர்கள் சங்க கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் 2018, 2019 ஆம் ஆண்டு ரூ.3 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 14 குடி மராமத்து பணிகள் குறித்து பாசனதாரர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், குடி மராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
பருவமழைக்கு முன் ஏரிகளை தூர்வார கோரிக்கை
பெரம்பலூர்: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளையும் பருவமழைக்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகம் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழைக்கு முன் ஏரிகளை தூர்வார கோரிக்கை
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் கருவேல முள் மரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்ந்துபோய் தூர்வாரப்படாமல் உள்ளன. பருவமழைக்கு முன்பாகவே ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.