கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைவரும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இதனை கிராமப்புற மக்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பாதாங்கி கிராமத்தில் வாரத்திற்கு இருமுறை மட்டுமே குடிதண்ணீர் வருவதாக கூறப்படுகிறது.
குடிதண்ணீர் பிடிப்பதற்காக நூற்றுக்கும், மேற்பட்ட மக்கள் தகுந்த இடைவெளி பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீருக்காக தகுந்த இடைவெளியை மறந்த மக்கள் ஏற்கனவே பெரம்பலூரில் கரோனா வைரஸால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன்மூலம் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. இது குறித்த அச்சமும் அப்பகுதி மக்களிடம் காணப்படுகிறது.
இதையும் படிங்க:பெரம்பலூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது