பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். மழையை நம்பியே பெருவாரியான நிலங்களில் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகின்றன. ஆற்று பாசனமும், ஏரிப்பாசனமும் கிடையாது மழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்யப்படும். மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பருத்தி, மக்காச் சோளம், சிறு தானிய பயிர் வகைகள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மேலும், பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயத்திற்கு பெயர்போன மாவட்டமாகும். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், செட்டிகுளம், பாடாலூர், நாரணமங்கலம், அம்மாபாளையம், களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், சின்ன வெங்காயம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் சாகுபடி செய்யப்பட்டு பட்டரை போட்டு பாதுகாக்கப்படுகிறது.