அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு, அரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்களுடன் 1000 ரூபாய் ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிறு அன்று பொங்கல் பரிசு வழங்கும் விழாவை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
பெரம்பலூரில் 282 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் - pongal price in ration shop at perambalur
பெரம்பலூர்: மாவட்டத்திலுள்ள் 282 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது.
pongal price in ration shop at perambalur
மாவட்டத்திலுள்ள 282 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்ட ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ஜன. 12ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் சந்திரா பொங்கல் பரிசு வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!
TAGGED:
pongal price in ration shop