தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரம்பலூரிலும் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராம மக்களுக்கு இங்குள்ள பொதுக் கிணறு பயன்படுத்தி வந்தனர். நல்ல சுவையான குடிநீர் கிணறாக சுற்றுவட்டார பகுதிமக்களுக்கு விளங்கியது. அனால், கிணற்றின் நீர்மட்டம் குறைந்து மரத்தின் இலைகள் விழுந்து, பராமரிப்பின்றி நீர் பயன்பாடின்றி போனது.
அரசை எதிர்பார்க்காமல் செயலில் இறங்கிய கிராம மக்கள் - cleaned
பெரம்பலூர்: அரசை எதிர்பார்க்காமல் அப்பகுதியில் உள்ள பொதுக் கிணற்றை பேரளி கிராம மக்கள் தூர்வாரியுள்ளனர்.
அரசை எதிர்பார்க்காமல் செயலில் இறங்கிய கிராமத்தினர்
இதுகுறித்து ஊராட்சியில் முறையிட்டும் பலனில்லாததால், அரசை எதிர்பார்க்காமல் செயலில் இறங்கிய கிராமத்தினர் கிணற்றை சுத்தம் செய்து, இலைகள், குப்பைகள் அகற்றி தூர்வாரினர். இப்பணியில், 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.