தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
ஏரியை தூர்வாரிய பொதுமக்கள்! - dredging
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து நிதி திரட்டி ஏரியை தூர்வாரியுள்ளனர்.
jcb
இந்நிலையில், அடுத்துவரும் பருவ மழையின்போதாவது நீரை சேமித்து வைக்க வேண்டும் என எண்ணிய பரவாய் கிராமத்தினர், ஏரியை தூர்வார முடிவெடுத்தனர்.
அதற்குத் தேவையான நிதியைத் திரட்டிய ஊர்மக்கள், ஜேசிபி இயந்திரங்களின் உதவியோடு அந்த ஏரியைத் தூர்வாரினர். இதனால், எதிர்வரும் பருவமழையில் மழை பெய்தால் நீர் நிலைகள் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.