பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பருவமழையில்லாத காலங்களில் மழை வேண்டி உருவபொம்மை செய்து அதனை வழிபடும் வழக்கம் உண்டு.
மழைவேண்டி கொடும்பாவிக்கு ஒப்பாரிவைத்த பெண்கள்! - ஒப்பாரி
பெரம்பலூர்: மழைவேண்டி கொடும்பாவி உருவபொம்மை செய்து ஒப்பாரி வைத்து சிறுவாச்சூரில் அப்பகுதியினர் விநோத வழிபாடு நடத்தினர்.

உருவப்பொம்பை வைத்து பெண்கள் ஒப்பாரி!
இந்த ஆண்டு பருவமழையின்மையால் அவ்வூர் மக்கள் மழை பெய்யவும் தங்களின் தண்ணீர் பஞ்சம் போகவும் அவர்களின் பாரம்பரிய வழக்கம்போல் இருபது அடி கொடும்பாவி உருவபொம்மை செய்து மாலை அணிவித்து அதனை விதிகளில் இழுத்துச்சென்றவாறே பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபட்டனர்.
உருவபொம்மை வைத்து பெண்கள் ஒப்பாரி!
அந்த ஊரின் அனைத்து வீதிகள் வழியாக உருவபொம்மை இழுத்துச் செல்லப்பட்டு பின்பு சிறுவாச்சூர் ஓடையில் வீசி எறியப்பட்டது. இருபது அடி உருவபொம்மையை வீதிகளில் இழுத்துச் சென்று வழிபட்டது பார்ப்பவர்களை ஆச்சரியத்திற்கு ஆழ்த்தியுள்ளது.