பெரம்பலூர்:பெரம்பலூரில் கோடை காலத்தில் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, வாட்டர் கேன்களை மரங்களில் கட்டி, அவைகளில் உணவு மற்றும் தண்ணீரை நிரப்பி ஏராளமான பறவைகளின் பசியையும் தாகத்தையும் தணித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் மாவட்ட கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி பிற காவலர்களை ஒன்றிணைத்து அப்பகுதியிலுள்ள மரங்களில் இவ்வாறு காலியான வாட்டர் கேன்களை சேகரித்து அவற்றில் தண்ணீரையும், கம்பு, அரிசி உள்ளிட்ட தானியங்களையும் வைத்து பறவைகளின் பசியை போக்கி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகாரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், மனிதர்கள் கோடை வெப்பத்திலிந்து தங்களை தற்காத்துக்கொள்ள பழங்கள் உட்கொள்வது குளிர்பானங்கள் அருந்துவது போன்ற பல்வேறு முறையில் வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர்.
ஆனால் பறவை இனங்களோ, கோடை வெயிலின் தாக்கத்தினை தணித்துக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தின் வளாகத்தில் சுமார் 100 மரங்கள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.