திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.
‘உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன்’ - களத்தில் பாரிவேந்தர்! - perambalur
பெரம்பலூர்: உங்களில் ஒருவனாக இருந்து தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் இன்று பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பாரிவேந்தர் பேசுகையில், தொகுதி மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் அறிந்து தேவைகளைப் பூர்த்தி செய்வேன் என்றும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக இருந்து தொகுதி மக்களின் நலனுக்காக பணியாற்றிடுவேன் எனவும் பாரிவேந்தர் தெரிவித்தார். அதேபோல், பெரம்பலூர் மக்களின் அடிப்படை கோரிக்கையான குடிநீர் பிரச்னை மற்றும் வேலைவாய்ப்பு அதிகப்படுத்துவதற்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தல், தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ரயில்வே திட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வேன் எனவும் அவர் உறுதியளித்தார். இந்த தேர்தல் பரப்புரையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.