பெரம்பலூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 8 ஆயிரத்து 410 பேர் எழுதினர். அதில் எட்டாயிரத்து இரண்டு பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 95.15% பெற்று இரண்டாம் இடத்தினைப் பிடித்து பெரம்பலூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதனால் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், கல்வித்துறை அலுவலர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடம் மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 10 மெட்ரிக் பள்ளிகள், 8 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநிலளவில் தேர்ச்சி விகிதத்தில் பன்னிரெண்டாவது இடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த வருடம் 3ஆவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.