தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைமுக தேர்தல்: திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு - ஊராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல்

பெரம்பலூர்: மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

dmk party win
dmk party win

By

Published : Jan 11, 2020, 1:58 PM IST

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள எட்டு இடங்களில் திமுக ஏழு இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், திமுக உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்ட ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை திமுக நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details