மத்திய பிரதேசத்தில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் வயது வரம்பு அற்றோர் மற்றும் 23 வயதுக்கு உட்பட்டோர் என்ற இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அணிகள் பங்குபெற்றன. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி மராத்திய அணியோடு இரு பிரிவுகளிலும் மோதியது. முடிவில் இரண்டு பிரிவுகளிலுமே தமிழ்நாடு அணி தங்கப் பதக்கத்தை வென்றது. தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர்இடம்பெற்றிருந்தனர்.
தேசிய கைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம்: பெரம்பலூர் வீரர்கள் சாதனை! - தங்கப்பதக்கம்
பெரம்பலூர்: தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியில் இடம்பெற்ற இரண்டு பெரம்பலூர் மாவட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் வீரர்கள்
இதனிடையே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தங்கப் பதக்கம் வென்று பெரம்பலூருக்கு வந்த இருவருக்கும் அம்மாவட்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு வீரர்கள், ’தங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி. மேலும், பல்வேறு சாதனைகள் புரிய நாங்கள் விடாமுயற்சி எடுப்போம்’ என்றனர்.