தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவர்ன்மெண்ட் ஸ்கூலா இது...! அசத்தும் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி! - அரசு மேல் நிலைப்பள்ளி

பெரம்பலூர்: பாடலூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஒன்று மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அதனை திறந்துவைத்தார்.

File pic

By

Published : Jun 7, 2019, 1:57 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெற்றுவருகிறது. இதில் எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சுலபமாக பயிலக்கூடிய வகையில் புதிய கட்டடங்கள் இன்று (ஜூன் 7) திறந்துவைக்கப்பட்டது.

மழலையர் பள்ளி

குழந்தைகளை கவரக்கூடிய வண்ணம் வெளிப்புற சுவற்றில் மிக அழகாய் நேர்த்தியாய் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. அதேபோல் உட்புற சுவரில் பல்வேறு கதைகளின் தத்ரூப காட்சிகளாய் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

இந்தாண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 65 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கட்டடத் திறப்பு விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details