தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் பஞ்சத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் நகர்ப்புற பகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர், காமராஜர் வளைவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீருக்காக ரோட்டில் காலிக்குடங்களுடன் களமிறங்கிய பெண்கள்! - water problem
பெரம்பலூர்: ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண்கள்
போராட்டத்தின்போது, தங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படையான குடிநீரை முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.