பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் எல்லைப் பகுதியில் உள்ள ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் முழுவதும் அடர்ந்து கிடந்ததை அடுத்து ஏரி வறண்டு காணப்பட்டது.
ஏரியை மீட்க பனை விதை விதைக்கும் மக்கள்! - னை விதை
பெரம்பலூர்: பொதுமக்கள் முயற்சியால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு , பனை விதைக்கும் பணியும், விதைப்பந்துகள் தூவும் பணியும் நடைபெற்று வருகிறது.
palm seed
இந்நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏரியை தூர்வார நிதி திரட்டி, அதனை சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். முதலில் ஏரியில் உள்ள கருவேல மரங்கள் ஜேசிபி எந்திரங்களின் உதவியோடு அகற்றப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து பனை விதைகளை விதைக்கும் பணியையும், விதைப்பந்துகளை தூவும் பணியையும் அப்பகுதி பொதுமக்கள் செய்துவருகின்றனர்.