பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளுக்கும், காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட எம் ஜி ஆர் நகர் 1ஆவது வார்டில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருபது நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொது மக்கள் சாலை மறியல்! - இருபது நாட்கள்
பெரம்பலூர்: பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியில் கடந்த இருபது நாட்களாக குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அரசு பேருந்துகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
people protest
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, நகராட்சி அலுவலர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடி குடிநீர் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக, அலுவலர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.