தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - people given petition against government officers'

பெரம்பலூர்: ஆவணங்கள் இருந்தும் இருப்பிடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய அரசு அலுவலர்களைக் கண்டித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

people given petition against government officers in perambalur
பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

By

Published : Mar 16, 2020, 5:59 PM IST

Updated : Mar 16, 2020, 8:04 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மங்குன் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் மலைப் பகுதியை ஒட்டி வசித்துவருகின்றனர்.

இவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் சிலர் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த சில நாட்களாக மிரட்டியுள்ளதாகக்கூறி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து முற்றுகையிட்டுள்ளனர்.

மேலும், தாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுவரி, மின் கட்டணம் போன்ற வரிகள் செலுத்திவருவதாகவும், தங்களிடம் குடும்ப அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்கள் உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களால் தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலைத் தொடர்ந்தால் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'விடுதிகளுக்குப் பணம் கொடுக்காத ஓயோ' - மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு

Last Updated : Mar 16, 2020, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details