பெரம்பலூர் மாவட்டம் பரவாய் கிராமத்தில், கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் நீர் நிலைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பரவாய் பெரிய ஏரி ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரப்பட்டது. தற்போது ஊருக்கு நடுவே உள்ள அம்பட்டன் ஏரியை தூர்வாரி வருகின்றனர்.
அம்பட்டன் ஏரி சுமார் 9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஊரின் தென்கிழக்கு பகுதியில் மழை காலத்தில் வழிந்தோடும் உபரி நீர், சிறு ஓடை வழியாக இந்த ஏரிக்கு வந்து சேர்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் மக்களுக்கு குடிநீர் வழங்கிய பிரதான நீர் நிலை அம்பட்டன் ஏரி தான். கோடைக்காலத்தில் ஏரியில் நீர் வற்றியவுடன், ஏரியின் நடுவில் உள்ள பெரிய கிணற்றில் நீர் எடுத்துக் கொள்வார்கள். இப்போது அந்த ஏரியில் எந்த ஒரு கிணறும் இல்லை. ஏரிக்குள் பெரிய கிணறு இருந்தற்கு அடையாளமாக கட்டுக் தற்கள் மட்டுமே காணப்படுகின்றன.