பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் கிராமத்திலிருந்து கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய கல்மரப் பூங்கா அமைந்துள்ளது. புவியியல் வரலாற்றுப்படி கிரி தேஜஸ் காலம் எனக் கூறப்படும் அக்காலத்திலும் இன்று கடலில் காணும் பிராணிகளை போல பல விதமான பிராணிகள் நிறைய இருந்தன. அப்பிராணிகள் இறந்தபிறகு ஆறுகளில் அடித்து வரப்படும் மணல், களிமண் இவற்றில் மூடப்பட்டு கடலின் அடியில் அமைந்தது. கடலோரப் பகுதிகளிலும் அதன் சமய இடங்களிலும் அழைத்து வந்த மரங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு காலப்போக்கில் கடலில் அமைந்துள்ள மாறியதாக வரலாறு கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த சாத்தனூர் கல்மரம் பூங்காவில் காணப்படும் பெரிய அடி மரம் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிராப்பள்ளி பகுதியில் அமைந்திருக்கிறது என்று புவியியல் ஆய்வு கூறுகிறது. இந்த சாத்தனூர் கல்மரம், அடி மரமானது 18 மீட்டர் நீளம் உள்ளதாக காணப்படுகிறது.
இதனிடையே புவியியல் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் சாத்தனூர் கல்மரம், பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பெருமைமிகு அடையாளமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த சாத்தனூர் கல்மரப் பூங்கா அருகே பல கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கல்மரம் குறித்த தகவல்கள் மற்றும் கடல் சார்ந்த படிமங்கள் உள்ளிட்டவை வைத்து அருங்காட்சியமாக செயல்பட கட்டப்பட்டது. இதனிடையே இந்த கல்மர அருங்காட்சியக பூங்கா இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
சர்வதேச அருங்காட்சியக தினம் நேற்று கடைபிடிக்கப்படும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரே ஒரு பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலமான கல்மரப் பூங்கா அருங்காட்சியகம் திறக்கப்படாமல், மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருப்பது சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் புவியியல் துறையோடு ஒன்றிணைந்து விரைந்து அருங்காட்சியகம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.