பெரம்பலூர்:பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா(27) தம்பதி. இவரது கணவர் விஜய் துபாயில் வேலை பார்த்து வருகிறார். ஜெயா, தனது 2 வயதான இரட்டை பெண் குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு பெண்ணகோணத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஜெயா வந்துள்ளார்.
இன்று (ஜனவரி 28) காலை ஜெயா தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் எவ்வளவு அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது இரட்டை பெண் குழந்தைகள் உடன் ஜெயா தற்கொலையால் உயிரிழந்தது தெரியவந்தது.