தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆ.ராசாவின் மனைவிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - ஆ.ராசாவின் மனைவி மறைவு

பெரம்பலூர்: திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடலுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

By

Published : May 30, 2021, 11:53 AM IST

திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி, உடல்நலக்குறைவால் நேற்று (மே 29) காலமானார். அவரது மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அதைத்தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக, ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அந்த வகையில், இன்று(மே.30) பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆ. ராசாவின் மனைவி உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பரமேஸ்வரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:ஆ.ராசா மனைவி மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details